Disclaimer   
Forum Super Search
 ♦ 
×
HashTag:
Member:
Posting Date From:
Posting Date To:
Train Type:
Train:
Station:
ONLY with Pic/Vid:
Sort by: Date:     Word Count:     Popularity:     
Public:    Pvt: Monitor:    RailFan Club:    

Search
  Go  
Full Site Search
  Search  
 
Sat Apr 29, 2017 15:22:48 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Sat Apr 29, 2017 15:22:48 IST
PostPostPost Trn TipPost Trn TipPost Stn TipPost Stn TipAdvanced Search
Filters:

Blog Posts by vinoth9888
Page#    47 Blog Entries  next>>
  
General Travel
0 Followers
493 views
Feb 01 2016 (16:56)  
 

vinoth9888   50 blog posts
Entry# 1726648            Tags   Past Edits
நீலகிரியின் அழகை ரசிக்க மலைரெயில் பயணத்தை விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
குன்னூர்,
நீலகிரியின் அழகை ரசிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
மலைகளின் ராணி
மலைகளின்
...
more...
ராணி என்று வர்ணிக்கப்படுவது நீலகிரி. மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான மே மாதத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, கோடை விழா, படகு போட்டி, படகு அலங்கார அணிவகுப்பு, குன்னூரில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி போன்றவை நடத்தப்படும். இதை கண்டு ரசிக்க நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து விடுவார்கள்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
தற்போது நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு சீதோஷண நிலையாக இருந்து வருகிறது. இந்த பனிப்பொழிவு காலத்தில் வெளிநாடுகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. அந்த நிலை நீலகிரி மாவட்டத்தில் தற்போது உள்ள பனிப்பொழிவை ஒத்து இருக்கிறது. இதன் காரணமாக மாவட்டத்துக்கு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மலைரெயில் போக்குவரத்தையே விரும்புகிறார்கள். மலைரெயில் பயணத்தின்போது இயற்கை அழகை ரசித்தவாறு பயணம் செய்கிறார்கள்.
மலை ரெயில் சேவை
நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே இந்த மலை ரெயில் சேவை அமைந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து 4 பெட்டிகளுடன் பர்னஸ் நீராவி என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டு குன்னூர் வருகிறது.
அதன் பின்னர் குன்னூரில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு ஊட்டிக்கு டீசல் என்ஜின் மூலம் ரெயில் புறப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வமுடன் பயணம் செய்கிறார்கள். தற்போது ஊட்டி, குன்னூர் பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வர முன்பதிவு செய்தும், முன்பதிவு இல்லாமல் ஆர்வத்துடன் பயணம் செல்கிறார்கள்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர் வந்து மலை ரெயிலில் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருந்தனர். அவர்கள் மேட்டுப்பாளையம்– ஊட்டி வரை உள்ள இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து கண்டு ரசித்தனர். குன்னூர் ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் இறங்கி அங்கும் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 ஆயித்து 810 பேரும், நேற்று சுமார் 6 ஆயிரம் பேர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேப்போல் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா நீர் வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
  
General Travel
0 Followers
491 views
Nov 19 2015 (18:47)  
 

vinoth9888   50 blog posts
Entry# 1654824            Tags   Past Edits
ராமேசுவரம், மதுரையில் இருந்து பாலக்காடு இடையே ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
திண்டுக்கல்,
ராமேசுவரம் மற்றும் மதுரையில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் எப்போது இயக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ரெயில்கள் ரத்து
ராமேசுவரத்தில்
...
more...
இருந்து பாலக்காடு வரை இருந்த மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்தது. இதையொட்டி, அந்த தடத்தில் இயக்கப்பட்ட ராமேசுவரம்–பாலக்காடு ரெயில், மதுரை– பாலக்காடு ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
பின்பு, முதலில் மதுரை– திண்டுக்கல், மதுரை–ராமேசுவரம் இடையே போடப்பட்டு இருந்த மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல்–பழனி, பழனி–பொள்ளாச்சி, பொள்ளாச்சி– பாலக்காடு இடையே பணிகள் நடந்தன. பின்பு ராமமேசுவரம்– மதுரை, மதுரை– திண்டுக்கல், திண்டுக்கல்– பழனி இடையே அடுத்தடுத்து ரெயில் சேவை தொடங்கியது. பின்பு பழனி வரை இயக்கப்பட்ட ரெயில்கள் பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்பட்டன.
மீண்டும் இயக்கப்படுமா?
இதற்கிடையே பொள்ளாச்சி– பாலக்காடு இடையேயான பணிகள் முடிந்து நீண்ட நாட்களாக ரெயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் திருச்செந்தூர்– பழனி– பொள்ளாச்சி செல்லும் ரெயிலை பாலக்காடு வரை நீட்டித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது. அதன்படி அந்த ரெயில் பாலக்காடு வரை சென்று வருகிறது. அந்த ரெயில் வருகிற 30–ந்தேதி வரை பாலக்காடுக்கு தற்காலிகமாக இயக்கப்படும் என முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அகல ரெயில்பாதை பணிக்காக ரத்து செய்யப்பட்ட ராமேசுவரம்– பாலக்காடு ரெயில், மதுரை–பாலக்காடு ரெயில் ஆகியைவை மீண்டும் இயக்கப்படுமா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. பணிகள் முடிந்து மீண்டும் ராமேசுவரம்– பாலக்காடு பாதையில் ரெயில் சேவை தொடங்கி உள்ள நிலையில், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.
விரைவில்...
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘முதற்கட்டமாக திருச்செந்தூர் ரெயில் பாலக்காடு வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் விரைவில் மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
  
General Travel
0 Followers
765 views
Oct 14 2015 (14:54)  
 

vinoth9888   50 blog posts
Entry# 1616809            Tags   Past Edits
பொள்ளாச்சியில் ரெயில் சேவை தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு விழா நாளை கொண்டாடப்படுகிறது
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ரெயில் சேவை தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நாளை நடக்கும் 100 ஆண்டுகள் நிறைவு விழாவில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
ரெயில்சேவை
பொள்ளாச்சியில்
...
more...
ரெயில் சேவை கடந்த 1915-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. கோவை அருகே உள்ள போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வரை மீட்டர் கேஜ் ரெயில்பாதையில் முதல் முதலாக ரெயில் இயக்கப்பட்டது. பின்னர் 1928-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும், 1932-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கும் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
இதை தொடர்ந்து பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல், மதுரை, ராமேசுவரம் ஆகிய பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன் மூலம் பொள்ளாச்சி ரெயில் நிலையம் சந்திப்பு ரெயில் நிலையமாக செயல்பட்டு வந்தது.
அகலரெயில் பாதை பணிகள்
இந்த நிலையில் திண்டுக்கல்-போத்தனூர், பொள்ளாச்சி-பாலக்காடு இடையேயான மீட்டர் கேஜ் ரெயில்பாதையை, அகலரெயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. இதில் பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே அகலரெயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் முதல் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது பொள்ளாச்சி-பாலக்காடு இடையே பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த பாதையில் ஆய்வு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால், விரைவில் ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
கவுரவிப்பு
இதற்கிடையில் நாளை (வியாழக்கிழமை) பொள்ளாச்சியில் ரெயில் சேவை தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு ஆகிறது. இதையொட்டி பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் 100 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் மகேந்திரன், செல்வராஜ், முத்துகருப்பண்ணசாமி எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
  
General Travel
0 Followers
493 views
May 23 2015 (12:33)  
 

vinoth9888   50 blog posts
Entry# 1481425            Tags   Past Edits
மெட்ரோ ரயில் வழித்தடம் தயார்:அடுத்த சில நாட்களில் சேவை துவக்கம் மெட்ரோ ரயில் சேவையை உடனடியாக துவக்குவதற்கு வசதியாக, வரும், 29ம் தேதிக்குள் மெட்ரோ ரயில் வழித்தட ஆய்வு முடிக்கப்படுகிறது; அடுத்த சில நாட்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்துார் இடையே, முதற்கட்டமாக, 10 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது.
பாதுகாப்பு ஆய்வு :
இந்த வழித்தடத்தில், கோயம்பேடு - அசோக் நகர் இடையே, 7.22 கி.மீ., துாரத்திற்கு பாதுகாப்பு ஆய்வு முடிந்து விட்டது. அசோக்
...
more...
நகர் - ஆலந்துார் இடையே, 2.88 கி.மீ., துாரத்திற்கு ஆய்வு மேற்கொள்ள தடையாக இருந்த, மெட்ரோ ரயில் சேவைக்கான பொது விதிமுறைகள் - 2013ல் திருத்தம் செய்யப்பட்டு விட்டது.இதனால், கோயம்பேடு - ஆலந்துார் இடையே, மெட்ரோ ரயில் சேவையை துவக்குவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது. முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின், பல நலத்திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அதில், மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. ஆகையால், மெட்ரோ ரயில் இறுதிகட்ட பாதுகாப்பு ஆய்வை, வரும் வாரத்தில் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விதிமுறைகளில் திருத்தம் :
வரும் 29ம் தேதிக்குள், அசோக் நகர் - ஆலந்துார் இடையே, பாதுகாப்பு ஆய்வை முடிக்க உள்ளோம். விதிமுறைகளில் திருத்தம் செய்து விட்டதால், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல், ஆய்வு நடத்தும் அன்றைய தினமே அனுமதி வழங்கி விடுவார். இதனால், வரும் 29ம் தேதிக்குள், வழித்தடம் தயாராகி விடும். இதுகுறித்து, அரசுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்.மெட்ரோ ரயில் சேவை துவக்க, தேதியை அரசு முடிவு செய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்
  
Rail News
0 Followers
1438 views
Other NewsSR/Southern  -  
Apr 22 2015 (22:41)   மண்டல மேலாளர் தகவல் : திருவண்ணாமலை- சென்னை நேரடி ரயில் இயக்க பரிசீலனை
 

vinoth9888   59 news posts
Entry# 1453461   News Entry# 221832         Tags   Past Edits
திருவண்ணாமலை: திருவண்ணாமலை-சென்னை நேரடி ரயில் இயக்குவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக ரயில்வே மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். தி. மலை ரயில் நிலையத்தில் திருச்சி மண்டல ரயில்வேத்துறை மேலாளர் ஏ.கே.அகர்வால் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று காலை 11.30 மணியளவில் சிறப்பு ரயில் மூலம் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்த அவர் ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் வசதி, அலுவலகங்கள் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள குடியிருப்புகளையும், மருத்துவமனையையும் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மலை-சென்னைக்கு நேரடி ரயில் இயக்க விரைவில் பரிசீலனை செய்யப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலையில் நின்று செல்லவும், முழுநேரமும் ரயில் முன்பதிவு சேவை செயல்படுத்த நடை முறைபடுத்தவும், ரயில் நிலையத்திற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
-

  
801 views
May 03 2015 (22:38)
A True Rail Fan   615 blog posts   173 correct pred (69% accurate)
Re# 1453461-1            Tags   Past Edits
It should be done soon...

  
2615 views
May 09 2015 (16:01)
rajeshkumar101de   13 blog posts
Re# 1453461-2            Tags   Past Edits
Definitly we need trains between tiruvannamalai to chennai
this shows how our indian goverment developments towards backward areas
We introduced means definitly passengers streanth is Sure incresing
Daily lakhs of people are travelling this rout via bus the bus fessilities are also so varst
At
...
more...
least plz Exten train fessilities to Arakonam Or Chengalpattu
  
General Travel
0 Followers
669 views
Apr 01 2015 (14:04)  
 

vinoth9888   50 blog posts
Entry# 1414090            Tags   Past Edits
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலைரெயிலில் மே 30-ந்தேதி வரை முன்பதிவு முடிந்தது கூடுதல் ரெயில் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
நீலகிரி
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலைரெயிலில் மே 30-ந்தேதி வரை முன்பதிவு முடிந்தது கூடுதல் ரெயில் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
நீலகிரியில் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளதால் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் மலை ரெயில் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணி கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
5
...
more...
பெட்டிகள்
நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சமாக நீலகிரி மலை ரெயில் விளங்கு கிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப் படும் மலை ரெயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணி கள் அதிக ஆர்வம் காட்டுகி றார்கள்.
குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுவதால் இதில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுவதால் 3 பெட்டி கள் மட்டுமே இணைக்கப்படு கின்றன.
கட்டணம்
ஊட்டி-குன்னூர் இடையே இயக்கப்படும் ரெயிலில் 2 பெட்டிகள் முன்பதிவு பெட்டி களாகவும், 3 பெட்டிகள் பொது பெட்டிகளாகவும் உள் ளன. குன்னூர்-மேட்டுப் பாளையம் இடையே இயக்கப் படும் ரெயிலில் 3 பெட்டிகளில் 2 பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாகவும், ஒரு பெட்டி பொது பெட்டியாகவும் இயக் கப்படுகிறது.
மேலும் ஊட்டி-குன்னூர் இடையே 2-ம் வகுப்பு பெட் டிக்கு ரூ.10-ம், முன்பதிவு செய்தால் ரூ.25-ம் கட்டண மாக வசூலிக்கப்படுகிறது. முதல் வகுப்பு பெட்டிக்கு முன் பதிவு இல்லாமல் ரூ.95-ம், முன்பதிவு செய்தால் ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்கப்படு கிறது.
முன்பதிவு முடிந்தது
மேட்டுப்பாளையம்- ஊட்டி வரை முதல் வகுப்பு கட்டணம் முன்பதிவோடு ரூ.205 என்றும், 2-ம் வகுப்பிற்கு முன்பதிவோடு ரூ.30 என்றும், முன்பதிவு இல்லாமல் ரூ.15-ம், கட்டணம் வசூலிக்கப்படு கிறது. குன்னூர்- மேட்டுப் பாளையம் இடையே முன் பதிவோடு முதல் வகுப்பிற்க்கு ரூ.180-ம், 2-ம் வகுப்பிற்கு ரூ.10 என்றும் வசூலிக்கப்படு கிறது. மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே செல்லும் மலை ரெயிலுக்கு வருகிற மே 30-ந் தேதி வரை முன்பதிவு முடிவடைந்து விட்டது. இத னால் பயணிகள் ஏமாற்றத் துடன் செல்லும் நிலை உள் ளது.
கோடை சீசன்
குன்னூர்-மேட்டுப்பாளை யம் இடையே ஒரு பெட்டி மட்டுமே பொதுப்பெட்டியாக உள்ளது. இதனால் இந்த பொது பெட்டியில் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தின் 2-வது வாரம் முதல் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார் கள்.தற்போது முன்பதிவு முடிந்து உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்ய முடி யாத நிலை ஏற்பட்டுஉள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு குன்னூர்- மேட் டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் குன் னூர்- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் ரெயில் இயக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது
  
General Travel
0 Followers
675 views
Feb 11 2015 (11:23)  
 

vinoth9888   50 blog posts
Entry# 1366337            Tags   Past Edits
முடியும் தருவாயில் கோயம்பேடு–ஆலந்தூர் மெட்ரோ ரெயில் பணிகள் பாதுகாப்பு கமிஷனர் சான்றிதழ் வழங்கினால்தான் திறப்புவிழா நடத்தமுடியும் சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் இன்னும் முடிவு பெறவில்லை. பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு முடிக்கும் பணியும் நிலுவையில் உள்ளது.
மெட்ரோ ரெயில்
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் பல கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதலாவதாக ரூ.4 ஆயிரம் கோடி செலவிலான முதல் கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்துக்கான மொத்த செலவில் 20 சதவீதம் தொகைதான் இந்த
...
more...
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீடு ஆகும்.
முதல்கட்ட பணிகளை நிறைவேற்றி முடிப்பதன் மூலம் கோயம்பேட்டிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ரெயில் நிலையங்கள் வரை மெட்ரோ ரெயில் ஓட முடியும்.
பாதுகாப்பு சான்றிதழ்
இதில் சில ரெயில் நிலையங்களில் இப்போது இறுதிகட்ட பணிகள் முடிவடையவில்லை என்றாலும், இறுதிகட்ட பணிகளை விரைவில் முடித்துவிடவேண்டும் என்று ஒரு உத்வேகத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை எல்லாம் முடித்தபிறகு மெட்ரோ ரெயில் நிர்வாகம் தீ தடுப்பு, பாதுகாப்பு சோதனைகளையும், ‘எஸ்கலேட்டர்’, ‘எலவேட்டர்’ போன்ற பணிகளையும் சோதனை செய்து அதற்கான சான்றிதழ்களை மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனருக்கு அனுப்பவேண்டும்.
முடியும் தருவாயில் பணிகள்
அதன் பிறகு பாதுகாப்பு கமிஷனர் சென்னை வந்து கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை பயணம் செய்து பாதுகாப்பு வசதிகள் எல்லாம் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசோதித்து ஒப்புதல் அளிப்பார்.
சட்டப்பூர்வமாக அனைத்து ஒப்புதல்களையும் அதிகாரப்பூர்வமாக அளித்தபிறகுதான் பயணிகள் போக்குவரத்துக்காக எப்போது மெட்ரோ ரெயில் பாதையை திறந்துவிடமுடியும் என்ற முடிவுக்கு வரமுடியும். அதன் பிறகு மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு தொடக்கவிழா தொடர்பாக கடிதம் எழுதும். அந்த கடிதம் வந்த பிறகுதான் மாநில அரசு சார்பில் தேதி வழங்கியபின் திறப்பு விழா நடத்தமுடியும். இந்தநிலையில் அனைத்து இறுதிகட்ட பணிகளும் தற்போது நிறைவுபெறும் தருவாயில் இருக்கிறது
  
தங்கள் மாநிலங்களுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் வேண்டும் என கோரி, பல மாநில எம்.பி.,க்கள், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து வருகின்றனர். ஆனால், தமிழக எம்.பி.,க்கள் இதுவரையிலும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், அடுத்த மாதம் 23ல் துவங்கி, மார்ச் 20 வரை நடைபெறவுள்ளது. இதில், பிப்ரவரி 26ல், ரயில்வே பட்ஜெட்டை, அமைச்சர் சுரேஷ் பிரபு, தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டுக்கு, டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே தயாரிப்பு பணிகள் நடைபெறும்.அந்த மாதங்களில், ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்தின் உயர் அதிகாரிகளை, எம்.பி.,க்கள் சந்தித்து, தங்கள் பகுதி திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவும், திட்டங்களை அறிவிக்க வும் வலியுறுத்துவது வழக்கம்.ஆனால், இந்த ஆண்டு, தமிழகத்தைச் சேர்ந்த எந்தவொரு எம்.பி.,யும், ரயில்வே திட்டங்களுக்காக, டில்லி வந்து கோரிக்கை வைக்கவில்லை.தனித்தனியாக, எம்.பி.,க்கள் வருவதை தவிர்த்து விட்டு, கட்சி சார்பில் குழுவாக வந்து, ரயில்வே அமைச்சரிடம், கடந்த காலங்களில், கோரிக்கை வைத்தது உண்டு. அதுபோல, இந்த முறை வந்து கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான அறிகுறி இல்லை.
குறிப்பாக,
...
more...
37 லோக்சபா எம்.பி.,க்களையும், 11 ராஜ்யசபா எம்.பி.,க்களையும் கொண்டுள்ள, அ.தி.மு.க., சார்பில், இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தான், பெரிய அளவில் உள்ளது. பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டங்களுக்காக, தமிழக எம்.பி.,க்கள் பலரும், அவ்வப்போது டில்லி வந்து போய் கொண்டு தான் உள்ளனர். ஆனால், இவர்களில் யாரும், இதுவரை ரயில்வே அமைச்சகத்திற்கு செல்லவோ, ரயில்வே திட்டங்கள் குறித்து வலியுறுத்தவோ இல்லை. அதே சமயம், கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களின் எம்.பி.,க்கள், அதிக அளவில், ரயில்வே அமைச்சகத்தில் குவிந்துள்ளனர். குறிப்பாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த எம்.பி.,க்கள் ஏராளமானோர் கோரிக்கை மனுக்களுடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த டிசம்பர் 23ம் தேதி, ரயில் அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழக எம்.பி.,க்களிடம் பேசவும், கோரிக்கை மனுக்களை வாங்கவும் அழைப்பு விடுத்திருந்தார். குளிர்கால கூட்டத்தொடருக்காக, எம்.பி.,க்கள் அனைவரும், டில்லியில் கூடியிருந்த சமயம் அது. எனினும், அமைச்சர் சுரேஷ் பிரபு கூட்டியிருந்த கூட்டத்திற்கு ஒருவர் கூட வரவில்லை. அதன் பிறகும் கூட, யாரும் தமிழக திட்டங்களுக்காக வலியுறுத்தவில்லை. அதே வேளையில், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, நிறைய குழுக்கள், எம்.பி.,க்கள் வந்தவண்ணம் உள்ளனர்.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
முடங்கி கிடக்கும் தமிழக திட்டங்கள்:
தமிழகத்தில் பல ரயில் திட்டங்கள், கவனிப்பா ரற்று கிடக்கின்றன. குறிப்பாக, செங்கல்பட்டு - -விழுப்புரம் இரட்டைப் பாதை, எட்டு ஆண்டுகளாக, இழுபறியில் உள்ளது.
* 2008ல் அறிவிக்கப்பட்ட, விழுப்புரம் - -திண்டுக்கல் இரட்டைப்பாதை இன்னும் முடியவில்லை. மதுரை- - கன்னியாகுமரி இரட்டைப்பாதை, ஆய்வுப் பணியுடன் நிற்கிறது.
* திண்டுக்கல் - -கோவை, காரைக்குடி- - மயிலாடுதுறை அகல ரயில் பாதை திட்டங்களும் கிடப்பில் உள்ளன.
* பெரம்பூர், இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை அறிவிப்பும், அப்படியே நிற்கிறது.
* 2008ல் அறிவிக்கப்பட்ட, நீடாமங்கலம் - -பட்டுக்கோட்டை, திருவண்ணாமலை - -ஜோலார்பேட்டை, திண்டுக்கல்- - குமுளி, அரியலுார் - -தஞ்சாவூர், மொரப்பூர் - -தர்மபுரி ஆகிய, ஐந்து புதிய ரயில் திட்டங்களும் கிடப்பில் உள்ளன.
மாநிலத்தின், எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான இந்த முக்கிய திட்டங்களில் சிலவற்றுக்காவது, வரும் ரயில்வே பட்ஜெட்டில், நிதி ஒதுக்கி, திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த முறை சந்திப்பு:
கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள், குழுவாகச் சென்று, தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து, கோரிக்கையை வைத்து வந்தனர். அது மட்டுமல்லாது, காங்., - ம.தி.மு.க., - பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூட, பட்ஜெட் தயாரிப்பின் போது, அமைச்சரை சந்தித்து, தங்கள் தொகுதிக்கான திட்டங்களுக்காக, மனுக்களை அளித்தனர்.

  
3499 views
Jan 29 2015 (12:22)
emailconnect2hari   738 blog posts   1 correct pred (50% accurate)
Re# 1354439-1            Tags   Past Edits
Ivangaluku Palkudam edukurathukum, Palkavadi edukurathukume time illa.. Ithula enga poi minister pathu.... Avanga side la ethavathu namma side kettu, athu sanction ana than undu...

  
2839 views
Jan 29 2015 (16:17)
vinoth9888   50 blog posts
Re# 1354439-2            Tags   Past Edits
all mp now in srirangam

  
2816 views
Jan 29 2015 (16:23)
emailconnect2hari   738 blog posts   1 correct pred (50% accurate)
Re# 1354439-3            Tags   Past Edits
before election, no one MP's will go and meet him...
  
Rail News
0 Followers
1368 views
New/Special TrainsSR/Southern  -  
Jan 09 2015 (09:13)   பழனி-பொள்ளாச்சி ரயில் சேவை துவங்கியது
 

vinoth9888   59 news posts
Entry# 1335429   News Entry# 208189         Tags   Past Edits
பழனி, பொள்ளாச்சி இடையேயான சிறப்பு ரயில் சேவை துவங்கியது. இன்று காலை 8 மணிக்கு இந்த சேவை துவங்கி உள்ளது.

  
2523 views
Jan 09 2015 (16:45)
Rizwaan Nilamaithin   41 blog posts
Re# 1335429-1            Tags   Past Edits
Regarding Udumalaipettai train service started on 09-Jan-2015:-All are expecting the train up to Madurai from Udumalaipettai.Due to so many people’s travelling daily to Madurai from Udumalaipettai.But it is missed from Udumalaipettai. Again we are expecting to provide the new train facility to Madurai from Udumalaipettai at 05.00 Hours then only we can go for Madurai 08.30 Hours then return train will be at 18.30 Hours from Madurai it will reach at Udumalpettai 22.00 hours.if it is provide the new train means all are satisfy for train timing and southern railway will generate the huge income as well as passenger satisfaction also.

1 posts are hidden.

  
7296 views
Jan 20 2015 (18:30)
Rizwaan Nilamaithin   41 blog posts
Re# 1335429-3            Tags   Past Edits
When express trains starts from Pollachi to Madurai and Madurai to Pollachi all are eagarly waiting for that to travel if it is start the same, time should be reached at Madurai 08.00AM so official peoples conveniently travel to madurai again down train should be evening 18.30PM
  
General Travel
0 Followers
1104 views
Nov 26 2014 (15:49)  
 

vinoth9888   50 blog posts
Entry# 1287844            Tags   Past Edits
பழநி--பொள்ளாச்சி ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் திருப்தி : பாதுகாப்பு ஆணையர் தகவல் பழநி,: பழநி--பொள்ளாச்சி வரையிலான ரயில்பாதையில் சதீஷ்குமார் மிட்டல் நேற்று முன்தினம் உடுமலை வரை டிராலியில் சென்று ரயில்வே ஸ்டேஷன்கள், லெவல்கிராசிங், இருப்பு
பாதையை ஆய்வு செய்தார்.அதன்பின் பொள்ளாச்சி-பழநி வரையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. பொள்ளாச்சியில் பகல் 3.34 மணிக்கு புறப்பட்டு 90 கி.மீ., வேகத்தில் எந்த ஸ்டேஷனிலும் நிறுத்தாமல் வேகமாக இயக்கப்பட்டு மாலை 4.18மணிக்கு பழநியை வந்தடைந்தது.
ரயிலை அதிவேகமாக சிறப்பாக இயக்கிய டிரைவர்கள் மனோகரன், கமலக்கண்ணன், கார்டு ராதாகிருஷ்ணவனுக்கு சதீஷ்குமார்மிட்டல் பரிசு வழங்கினார். மதுரை மண்டல பொதுமேலாளர் ரஸ்தோகி உடனிருந்தார்.சதீஷ்குமார் மிட்டல் கூறியதாவது: பழநி- பொள்ளாச்சி வரையிலான 63 கி.மீ., பாதையில் ரயிலை வேகமாக இயக்கி இருப்பு பாதையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நேற்றுமுன்தினம் சிக்னல்கள்,
...
more...
லெவல் கிராசிங் உள்ளிட்ட வழித்தடங்கள் பார்வையிடப்பட்டன. அனைத்தும் திருப்திகரமாக உள்ளது. இதற்கான அறிக்கை உயர்அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின் பழநி-பொள்ளாச்சி ரயில் இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும்,' என்றார்.

  
1084 views
Nov 26 2014 (15:52)
Hyderabad Karnataka needs a dedicated train to SBC*^~   9687 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1287844-1            Tags   Past Edits
wow great. They should have praised GOC too for mainitaining the loco's well
Page#    47 Blog Entries  next>>

ARP (Advanced Reservation Period) Calculator

Reservations Open Today @ 8am for:
Trains with ARP 10 Dep on: Tue May 9
Trains with ARP 15 Dep on: Sun May 14
Trains with ARP 30 Dep on: Mon May 29
Trains with ARP 120 Dep on: Sun Aug 27

  
  

Rail News

New Trains

Site Announcements

  • Entry# 2175399
    Feb 23 2017 (01:22PM)


    There has recently been a lot of frustration among RFs when their Station Pics, Loco Pics, Train Pics get rejected because the "number is not showing", "shed is not visible", the loco/train is at a distance, Train Board is too small, "better pic available", etc. . To address this issue, effective tomorrow, ALL...
  • Entry# 2165159
    Feb 15 2017 (09:53AM)


    A minor update, but may impact many members: Hereafter, FMs will be able to delete invalid Red Flags on Imaginary trains. Red Flags can be removed by FMs, only against specific complaints filed against the blog. This does not give all members the right to complain against EVERY single red flag they...
  • Entry# 2155798
    Feb 08 2017 (11:40AM)


    -@all members: As of recently, there has been a trend whereby minor name updates of Trains/Stations - whether such and such regional name should be there or not, whether the train should be called "Abc Express" or "Abc Superfast Express", etc. are threatening to take over the majority of Timeline entries. Also,...
  • Entry# 2147631
    Feb 01 2017 (11:05AM)


    A new experimental feature is being introduced called BotD - "Blog of the Day". The rules are: . 1. Replies are not eligible - only the Top Blog. 2. ONLY Blogs posted today (the day of the vote) are eligible. 3. Every member has ONE vote. In the course of the day, you may keep...
  • Entry# 2136570
    Jan 23 2017 (12:25AM)


    Several new features have been introduced recently to the Forum, and we are forever striving to make Member experience here more productive and satisfying. With the recent introduction and success of the new FM System, it has been observed that small groups of highly involved and enthusiastic members are far more...
  • Entry# 2134907
    Jan 21 2017 (02:46PM)


    It has been over 2 weeks since the appointment of the current batch of FMs and 750 Complaints have been handled so far. It gives me immense pleasure in congratulating them for running the team diligently, professionally, competently and above all, without a shred of controversy or bias. The FM position...
Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site