Disclaimer   
News Super Search
 ♦ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  
Full Site Search
  Search  
 
Thu Mar 30, 2017 15:03:57 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Thu Mar 30, 2017 15:03:57 IST
Advanced Search
Trains in the News    Stations in the News   
<<prev entry    next entry>>
News Entry# 287007
  
Nov 28 2016 (14:38)  தமிழக-கேரள எல்லை அருகே ரெயில் மோதி காட்டு யானை சாவு (www.dailythanthi.com)
back to top
Crime/AccidentsSR/Southern  -  

News Entry# 287007     
   Tags   Past Edits
This is a new feature showing past edits to this News Post.

Posted by: indradhanush  7 news posts
தமிழக-கேரள எல்லை அருகே ரெயில் மோதி காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
ரெயில் மோதி யானை சாவு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே உள்ள தமிழக-கேரள எல்லை அருகே வட்டக்காடு என்ற வனப்பகுதியை விட்டு நேற்று காலை 7.10 மணிக்கு ஒரு ஆண் யானை வெளியே வந்தது. பின்னர் அந்த யானை அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக பாலக்காட்டில் இருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரெயில் அந்த யானை மீது திடீரென்று மோதியது.
இதில் அந்த யானை தூக்கி வீசப்பட்டு தண்டவாளத்தில்
...
more...
விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அந்த யானை சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. அந்த காட்டு யானையின் உடல் தண்டவாளத்தில் கிடந்ததால், ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
யானையின் உடல் அகற்றம்
இந்த விபத்து குறித்து பாலக்காடு வனத்துறை அதிகாரிகள் மற்றும், ரெயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். யானை அடிபட்டு இறந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு மேற்கொண்டு யானைகள் வரக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனவே அந்த பயணிகள் ரெயில் பின்னோக்கியபடி கஞ்சிக்கோடு ரெயில் நிலையத்துக்கு சென்றது.
பின்னர் அந்த ரெயில் சுமார் ஒரு மணி நேர தாமதத்துக்கு பின்னர் மற்றொரு தண்டவாளம் வழியாக கோவை வந்தடைந்தது. இதற்கிடையே வனத்துறையினர் தண்டவாளத்தில் கிடந்த அந்த யானையை அங்கிருந்து அகற்றினர். இதனால் பகல் 12.30 மணிக்கு மேல் அந்த தண்டவாளம் வழியாக மீண்டும் ரெயில் இயக்கப்பட்டது.
விசாரணை
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஆண் யானை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்து உள்ளது. அந்த யானைக்கு 30 வயது இருக்கும். வனப்பகுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் தான் ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் தான் ரெயில் இயக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது‘ என்றனர்.
Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site