Personal comments will be immediately deleted by our Admins. Admins are NOT obligated to explain their actions. Please respect our Admins' decisions. They are instrumental in maintaining the quality of this forum.
If you do not agree with the above, then please DO NOT POST. Thanks.
சென்னை, ஜூலை.11 - ரயில் டிக்கெட்களுக்கான தத்கல் முன்பதிவு நேரம் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணியாக நேற்று மாற்றப்பட்டது. இதற்காக சென்னை சென்ட்ரலில் 8 சிறப்பு கவுன்டர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. வழக்கமாக தத்கல் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும். அந்த நேரத்திலேயே வழக்கமான முன்பதிவு தொடங்குவதால், கூடுதல் சுமை இருப்பதாக ஊழியர்கள் தரப்பிலும், காலையில் முன்பதிவு தொடங்குவதால், போலி தரகர்கள் முன்பதிவு செய்து விடுவதாகவும் புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து தத்கல் முன்பதிவு ஜூலை 10ம் தேதி முதல் காலை 10 மணிக்கு தொடங் கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று காலை 10 மணிக்கு தத்கல் முன்பதிவு தொடங்கியது. ஆனால், வழக்கம் போல் காலை 6 மணிக்கே தத்கல் முன்பதிவு செய்ய அதிகமானோர் காத்திருந்தனர். சென்னை சென்ட்ரல், எழும்nullர், மயிலை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் பலர் வரிசையாக காத்திருந்திருந்தனர். சென்னை சென்ட்ரல் முன்பதிவு மையத்தில் தத்கல் முன்பதிவு செய்வதற்கு 8 கவுன்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, 2 கவுன்டர்களில் காலை 8 மணிக்கு வழக்கமான முன்பதிவுகள் செய்யப்பட்டன. நேரம் மாற்றப்பட்டவுடன் முதல்நாளில் பலர் வரிசையாக இருந்து டிக்கெட் பெற்றனர். ஆன்லைன் டிக்கெட்டிற்கு தடைசெய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் புதியமுறையை வரவேற்றனர். தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தத்கல் முன்பதிவு சரியாக 10 மணிக்கு தொடங்கி 10.20 மணிக்குள் முடிந்துவிட்டது.