click here
திருச்சி-திண்டுக்கல் இடையே உள்ள மணப்பாறை-கல்பட்டிச்சத்திரம் பகுதியில் இரட்டைரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
* குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை...
more... திண்டுக்கல்-திருச்சி வழித்தடத்தில் செல்வதற்கு பதிலாக, திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பி விடப்படும். ஆகையால் திருச்சி ரயில் நிலையத்துக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் (16352) அடுத்த மாதம் 1-ந்தேதி திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பிவிடப்படும். இதனால் திருச்சிக்கு ஒரு மணி நேரம் 55 நிமிடம் தாமதமாக செல்லும்.
* ஸ்ரீமாதாவைஷ்ணோதேவி கட்ராவில் இருந்து நாளை(திங்கட்கிழமை) புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்(16788) மற்றும் கச்சுகுடாவில் இருந்து 31-ந்தேதி புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்(16353) கரூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து 7-ந்தேதி புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்(16127) திருச்சி, கரூர் மற்றும் திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும். இதனால் நெல்லைக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* மயிலாடுதுறை-நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரயில் 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை (வ.எண்.56821, 56822) திருச்சி-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
please wait...Translate to Hindiइधर देखो, दोस्त! तिरुच्ची-दिण्डुक्कल के बीच मणप्पाऱै-कलपट्टीशत्र के इलाके में रेल का मार्ग बदल दिया गया है। इसलिए कुछ ट्रेनें अब करूर-तिरुच्ची रूट से होगी।