சென்னை: ''கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் - அரக்கோணம் - திருவள்ளூர் - கடற்கரை நிலையம் இடையே, வட்ட ரயில் பாதையில், மார்ச்சில், புறநகர் மின்சார ரயில் இயக்கப்படும்,''
என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா கூறினார்.
சென்னை, கடற்கரை -தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் இடையே, 2004ம் ஆண்டில் இருந்து, புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.திருமால்பூர் - அரக்கோணம் ரயில் பாதையை, மின்மயமாக்கினால், கடற்கரை - செங்கல்பட்டு -காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருவள்ளூர் - கடற்கரைக்கு, வட்ட ரயில் பாதையில், மின்சார ரயில் இயக்கலாம் என, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக,...
more... தக்கோலத்தில் இருந்து, அரக்கோணம் வரை, ரயில் பாதையை, மின் மயமாக்க, முடிவு செய்தது.இப்பாதையை மின்மயமாக்கினால், தக்கோலத்தில் உள்ள, ராஜாளி கடற்படை விமான நிலையத்தில், விமானங்கள் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்படும். இதனால், மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என, ராணுவ நிர்வாகம் வலியுறுத்தியது.
மாற்றுப் பாதை அமைக்க, நிதியும் வழங்கியது.இதையொட்டி, தக்கோலத்தில் இருந்து அரக்கோணம் வரை, 10 கி.மீ., புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, 25ம் தேதி, தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன், இப்பாதையில் விரைவு ரயில் இயக்கி, சோதனை நடத்தினார்.அரக்கோணத்தில் கட்டப்பட்டுள்ள, ரயில்வே பாதுகாப்பு படையினரின் ஓய்வு இல்லத்தை திறந்து வைக்க சென்ற, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா, அரக்கோணத்தில் இருந்து, தக்கோலம் வரை, ரயிலில் சென்று வந்தார்.'வட்ட பாதையில், ரயில் எப்போது இயக்கப்படும்?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர், குல்ஷ்ரேஸ்தா கூறியதாவது:ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், இப்பாதையில், 25ம் தேதி, விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தியுள்ளார். பாதுகாப்பு சான்றிதழ், இன்னும் வழங்கவில்லை.சான்றிதழ் கிடைத்ததும், மார்ச் முதல் வாரத்தில், கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை கடற்கரை ரயில் நிலையம் இடையே, வட்ட ரயில் பாதையில், புறநகர் மின்சார ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.