சென்னை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களின் புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 49 விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் புதிய கால அட்டவணைப்படி விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி - கன்னியாகுமரி (16861) வாராந் திர ரயில் இனி ஞாயிற்றுக் கிழமைகளிலும், கன்னியாகுமரி - புதுச்சேரி (16862) வாராந்திர ரயில் இனி திங்கள்கிழமைகளிலும் வரும் 7-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.
சென்னை...
more... கோட்டத்தில் இருந்து இயக்கப் படும் விரைவு ரயில்களில் 49 விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு புதிய காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விரைவு ரயில்களின் மாற்றியமைக் கப்பட்ட நேர விவரம் வருமாறு (பழைய நேரம் அடைப்புக்குறிக்குள்):
சென்ட்ரலுக்கு வருகை
மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர்) விரைவு ரயில் (12672) அதிகாலை 5 (அதிகாலை 5.05), ஜெய்ப்பூர் வாரம் இருமுறை விரைவு ரயில் (12968) காலை 9.30 (காலை 9.45), திருவனந்தபுரம் வாரம் இருமுறை விரைவு ரயில் (22208) காலை 10.15 மணிக்கு (மதியம் 12 மணி) உட்பட 6 விரைவு ரயில்களின் வருகை நேரம் 5 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 1 மணி 45 நிமிடங்கள் வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரலில் இருந்து புறப்பாடு
சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு (12639) காலை 7.40 (காலை 7.50), திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695) மாலை 3.20 (மாலை 3.25), திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (12697) மாலை 3.10 (மாலை 3.15), கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரயில் (12607) மாலை 3.30 (மாலை 3.35) உட்பட 10 விரைவு ரயில்களின் புறப்படும் நேரத்தில் 5 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை மாற்றப்பட்டுள்ளது.
எழும்பூருக்கு வருகை
சேலம் - சென்னை எழும்பூர் (22154) அதிகாலை 3.40 (அதிகாலை 3.45), காகிநாடா - செங்கல்பட்டு காலை 6.05 (காலை 6.30), நிஜாமுதீன் - மதுரை வாரம் இருமுறை விரைவு ரயில் (12652) காலை 5.55 (6.05), காரைக்கால் - லோக்மான்யதிலக் வாராந்திர ரயில் (11018) இரவு 9.50 (இரவு 10) உட்பட 13 விரைவு ரயில்களின் வருகை நேரம் 5 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 25 நிமிடங்கள் வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து புறப்பாடு
சென்னை எழும்பூர் - குருவாயூர் (16127) காலை 8.25 (காலை 8.15), அனந்தபுரி விரைவு ரயில் (16723) இரவு 8.10 (இரவு 7.50), திருநெல்வேலி விரைவு ரயில் (12631) இரவு 7.50 (இரவு 8.10), தஞ்சாவூர் விரைவு ரயில் (16865) இரவு 10.55 (இரவு 10.40), சேலம் விரைவு ரயில் (22153) இரவு 10.45 (இரவு 11) உட்பட 14 விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமையக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு விரைவு ரயில்கள்
காக்கிநாடா - செங்கல்பட்டு (17644) வருகை நேரம் காலை 7.40 (காலை 8.20), செங்கல்பட்டு - காச்சிகுடா (17652) புறப்படும் நேரம் மாலை 3.20 (மாலை 3.30) என நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஜோலார்பேட்டை - சென்னை சென்ட்ரல் வருகை நேரம் அதிகாலை 5 (அதிகாலை 4.55) என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரயில் எண்கள் மாற்றம்
சில ரயில்களின் எண்களும் மாற்றப் பட்டுள்ளன. அதன்படி சென்னை எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில் (16159/16160), குருவாயூர் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (16841/16842), தாம்பரம் - விழுப்புரம் ரயில் (56059/56060), அரக்கோணம் - ஜோலார்பேட்டை ரயில் (56121/56122) ஆகியவை மாற்றப்பட்டுள்ளன..
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
தவறவிடாதீர்
பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு எத்தகையது?
''கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தில் திடீர் விஞ்ஞானிகள் மக்களை ஏமாற்றுகின்றனர்'' என்று முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருப்பது...
ஒலி-ஒளி
'ஜீவி' - செல்ஃபி விமர்சனம்
ஒலி-ஒளி
'Annabelle Comes Home' - செல்ஃபி விமர்சனம்
அகில இந்திய தலைமைக்கு ஆயிரம் கண்கள் உண்டு: கராத்தே தியாகராஜனுக்கு கே.எஸ்.அழகிரி பதில்
கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்; காவல் ஆணையரிடம் புகார்- கராத்தே தியாகராஜனுக்கு கோபண்ணா எச்சரிக்கை
மாமழை போற்றுதும்... - சீனாவில் தமிழ் கல்வெட்டு!
விஜயதரணி மீது ஏன் நடவடிக்கை இல்லை; எனக்கு மட்டும் நெருக்கடியா?: கராத்தே தியாகராஜன் கடும் விமர்சனம்
முதல்வர் பழனிசாமி தண்ணீரை ஒளித்து வைத்திருக்கிறாரா? - கனிமொழி கேள்வி
ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம்: முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும்; கி.வீரமணி
ராஜராஜ சோழனுக்கு அரசு நினைவாலயம் அமைக்க வேண்டும்: எச்.ராஜா வலியுறுத்தல்
தமிழகத்தில் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை இலவசமாகக் கற்றுத்தரும் இளைஞர்
நாளை ஓய்வு பெறுகிறார் கிரிஜா வைத்தியநாதன்: புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம்
தொண்டர்கள் எங்கள் பக்கமே; நிர்வாகிகள் செல்வதால் அமமுகவின் பலம் குறையாது: டிடிவி.தினகரன் நம்பிக்கை
6 மாதங்களாக இயக்குநர் பணியிடம் காலி: மதுரை உலக தமிழ்ச்சங்க செயல்பாடு மந்தம் - தமிழ் ஆய்வு நூல்கள், காப்பியங்கள் இல்லை என புகார்
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் மூன்றரை ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத எம்ஆர்ஐ ஸ்கேன்: சிறுநீரகக் கல் நீக்கும் இயந்திரமும் பழுது
இந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்
பிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்
Comments to: webadmin@thehindutamil.co.in Copyright © 2019, KSL Media Limited