Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

हम RailFan - हमेशा पंखों पे

Full Site Search
  Full Site Search  
FmT LIVE - Follow my Trip with me... LIVE
 
Mon Jun 21 19:49:45 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Post PNRAdvanced Search
Medium; Platform Pic; Large Station Board;
Entry# 4353644-0
Medium; Platform Pic; Large Station Board;
Entry# 4353644-0
Medium; Front Entrance - Outside; Small Station Board;
Entry# 4353644-0

ANY/Arumuganeri (2 PFs)
ஆறுமுகநேரி     आरुमुगनेरी

Track: Single Diesel-Line

Show ALL Trains
Arumuganeri, Tamil Nadu
State: Tamil Nadu


Zone: SR/Southern   Division: Madurai

No Recent News for ANY/Arumuganeri
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 14
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: NaN/5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 4 of 4 News Items  
மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிவியல் குறித்த ஆர்வத்தை தூண்டவும் நடமாடும் அறிவியல் கண்காட்சி ரயிலானது கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரித்தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய ரயில்வே, இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் விக்ரம் சாராபாய் சமுதாய அறிவியல் மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இயங்கும் இந்த சிறப்பு ரயில், கடந்த பத்து வருடங்களில் எட்டு சுற்றுப்பயணங்களை முடித்து தற்போது ஒன்பதாவது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.
பதினாறு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் குறித்த தலைப்பில் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறப்பம்சமாக மூன்று பெட்டிகளில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
நாடு
...
more...
முழுவதும் சுற்றி வரும் இந்த ரயில், கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி டெல்லி சப்தார்ஜுங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 68 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில் 19000 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பயணம் செய்கிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற ஜூன் மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரி வரும் இந்த ரயில், புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஜூன் 15-16 ஆகிய தேதிகளிலும், தமிழ்நாட்டில் ஆத்தூர் ரயில் நிலையத்தில் 17- 19 ஆம் தேதிகளிலும், கரூர் ரயில் நிலையத்தில் 20- 22ஆம் தேதிகளிலும், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் 24ஆம் தேதியும், விருதுநகர் ரயில் நிலையத்தில் 25- 27 ஆம் தேதிகளிலும், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் 28- 30 ஆகிய தேதிகளிலும் மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதன் பின் கேரளா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக சென்று வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி குஜராத் மாநிலம் காந்திநகர் ரயில் நிலையத்தில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
இச்சிறப்பு வாய்ந்த ரயில், விரைவான கட்டமைப்பு, அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்தது உள்ளிட்ட ஆறு லிம்கா சாதனைகளை படைத்துள்ளது.
இதுவரை சுமார் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்த இந்த ரயில், 455 ரயில் நிலையங்களில் நின்றுள்ளது. 1.61 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி பேசும் பலர் மட்டுமே ஒவ்வொரு பெட்டிகளிலும் வழிகாட்டிகளாக இருப்பதால், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவியல் விளக்கங்கள் சென்றடைவதில்லை. மேலும் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ள சென்னை, வேலூர், நாமக்கல், திருச்சி மற்றும் கோவை போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்வதுடன், மாநில வாரியாக மொழி அறிவு படைத்த வழிகாட்டிகளை நியமித்து அறிவியல் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
மேலும் தகவல்களுக்கு வலைதளம் scienceexpress.in
Tour Schedule [17 February - 8 September 2017]
Tour Schedule | Route Map | Tour phase I-VIII
No. Station Exhibition Dates No. Station Exhibition Dates
1. Delhi Safdarjung
(Flag off) 17 Feb 2017 35. Kottavalasa 20 - 23 May 2017
2. Delhi
...
more...
Cantt 18 - 19 Feb 2017 36. Gudivada 24 - 26 May 2017
3. Hisar 20 - 23 Feb 2017 37.. Mirylaguda 27 - 30 May 2017
4. Dhuri 24 - 26 Feb 2017 38. Gulberga 31 May-2 Jun 2017
5. Taran Taran 27 - 28 Feb 2017 39. Kalluru 3 - 5 Jun 2017
6. Sri Mata Vaishno Devi Katra 1 - 2 Mar 2017 40. Whitefield 6 - 8 Jun 2017
7. Udhampur 3 - 4 Mar 2017 41. Kengeri 9 - 11 Jun 2017
8. Nangal Dam 6 - 7 Mar 2017 42. Koduru 12 - 14 Jun 2017
9. Sirhind 8 - 10 Mar 2017 43. Puducherry 15 - 16 Jun 2017
10. Chandigarh 12 & 14 Mar 2017 44. Attur 17 - 19 Jun 2017
11. Rampur 15 - 17 Mar 2017 45. Karur 20 - 22 Jun 2017
12. Kasganj City 18 - 20 Mar 2017 46. Kodaikanal Road 24 Jun 2017
13. Khalilabad 22 - 25 Mar 2017 47. Virudhunagar 25 - 27 Jun 2017
14. Mau 26 - 29 Mar 2017 48. Arumuganeri 28 - 30 Jun 2017
15. Gaya 30 - 31 Mar 2017 49. Kayankulam 1 - 4 Jul 2017
16. Patna 1 - 2 Apr 2017 50. Guruvayur 5 - 7 Jul 2017
17. Kiul 3 - 4 Apr 2017 51. Kannur 8 - 10 Jul 2017
18. Sitamarhi 5 Apr 2017 52. Vasco Da Gama 11 - 13 Jul 2017
19. Samastipur 6 Apr 2017 53. Ratnagiri 14 - 17 Jul 2017
20. Salmari 7 - 8 Apr 2017 54. Mumbai CST 19 - 22 Jul 2017
21. Fakiragram 9 - 10 Apr 2017 55. Nasik Road 24 - 26 Jul 2017
22. Lumding 11 - 12 Apr 2017 56. Murtajapur 27 - 29 Jul 2017
23. Agartala 13 - 14 Apr 2017 57. Nagpur 30 Jul-02 Aug 2017
24. Badarpur 15 - 17 Apr 2017 58. Amla 3 - 6 Aug 2017
25. North Lakhimpur 19 - 21 Apr 2017 59. Habibganj 7 - 9 Aug 2017
26. Rangpara North 22 - 24 Apr 2017 60. Bina 10 - 12 Aug 2017
27. Bagdogra 25 - 26 Apr 2017 61. Khajuraho 13 - 14 Aug 2017
28. Dhanbad 27 - 30 Apr 2017 62. Marwar 17 - 18 Aug 2017
29. Barrackpore 1 - 2 May 2017 63. Balotra 19 - 21 Aug 2017
30. Kalyani 3 - 5 May 2017 64. Deesa 22 - 24 Aug 2017
31. Chandil 6 - 8 May 2017 65. Bhuj 25 - 27 Aug 2017
32. Bhadrak 9, 11 & 12 May 2017 66. Bhaktinagar 28 - 31 Aug 2017
33. Puri 13 - 16 May 2017 67. Gondal 1 - 4 Sep 2017
34. Chatarpur 17 - 19 May 2017 68. Gandhinagar Capital 5 - 8 Sep 2017
Feb 25 2016 (09:54) ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு (www.dailythanthi.com)
Politics
SR/Southern

News Entry# 258714   
  Past Edits
Feb 25 2016 (9:54AM)
Station Tag: Arumuganeri/ANY added by emailconnect2hari/1069947
Stations:  Arumuganeri/ANY  
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் ரெயில் நிலைய மேலாளர் சங்கர நாராயணனிடம் ரெயில் நிலையத்தின் தேவைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் குப்பை மேடாக காட்சி அளிக்கும் ரெயில்வே பீடர் ரோட்டை பார்வையிட்டார்.
பின்னர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. கூறுகையில், ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மெயின் ரோட்டுக்கு செல்லும் ரெயில்வே பீடர் ரோட்டை புதுப்பிக்க எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குவேன். ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் தமிழ் பேச தெரிந்த அதிகாரிகளை நியமிக்க மதுரை ரெயில்வே கோட்ட மேலாளரிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும் ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் முன்பு செயல்பட்டதுபோன்று, மதியம் 3 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வலியுறுத்தி உள்ளேன் என்று தெரிவித்தார்.
முன்னாள்
...
more...
நகர செயலாளர் சா.பொன்ராஜ், இளைஞர் பாசறை செயலாளர் மாணிக்கராஜ், ஆ.பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Aug 05 2015 (11:34) ஆறுமுகநேரி ரெயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி (www.dailythanthi.com)
Other News
SR/Southern

News Entry# 236525   
  Past Edits
This is a new feature showing past edits to this News Post.
Stations:  Arumuganeri/ANY  
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரி ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெற்றது.
பராமரிப்பு பணி
அனைத்து ரெயில்வே கேட் பகுதிகளிலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நேற்று நடந்தது. அதன்படி ரெயில்வே கேட் பகுதியில் உள்ள
...
more...
தார் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். பின்னர் தண்டவாளங்கள் மற்றும் அதனை தாங்கும் தளவாடங்களை ரெயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து சரி செய்தனர்.
பின்னர் ரெயில்வே கேட் பகுதியில் புதிதாக சிமெண்டு சாலை அமைத்தனர். இதனால் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. எனவே தூத்துக்குடி– திருச்செந்தூர் இடையே செல்லும் வாகனங்கள் ஆறுமுகநேரிக்கு செல்லாமல், காயல்பட்டினம் பைபாஸ் ரோடு வழியாக சென்றன.
இன்று, காயல்பட்டினத்தில்...
ஆறுமுகநேரியைச் சேர்ந்த பொதுமக்கள் காயல்பட்டினம் வரை வாகனங்களில் சென்று, அங்கிருந்து பஸ் ஏறி சென்றனர். சிலர் ஆறுமுகநேரி ரெயில்வே கேட்டை கடந்து சென்று, கடலோர போலீஸ் வாகன சோதனை சாவடி அருகில் நின்று பஸ் ஏறி சென்றனர்.
இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காயல்பட்டினம் ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே ஆறுமுகநேரி– காயல்பட்டினம் இடையே வாகனங்கள் செல்ல இயலாது.
தூத்துக்குடி– திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் வாகனங்கள் வழக்கம்போல் ஆறுமுகநேரி வழியாகவும், காயல்பட்டினம் பைபாஸ் ரோடு வழியாகவும் செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Page#    Showing 1 to 4 of 4 News Items  

Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy