Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

TATA Steel Express - Second Sitting sasta bhi, sabse achha bhi - Ravi Raj

Full Site Search
  Full Site Search  
FmT LIVE - Follow my Trip with me... LIVE
 
Sun Jun 13 20:23:04 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Post PNRAdvanced Search
Large Station Board;
Entry# 447337-0
Large Station Board;
Entry# 4333390-1

TTP/Tiruturaipundi Junction (3 PFs)
திருத்துறைப்பூண்டி சந்திப்பு     तिरुतुरैपूंडी जंक्शन

Track: Single Diesel-Line

Show ALL Trains
State Highway 63, Thiruthuraipoondi PIN 614713
State: Tamil Nadu


Zone: SR/Southern   Division: Tiruchchirappalli

No Recent News for TTP/Tiruturaipundi Junction
Nearby Stations in the News
Type of Station: Junction
Number of Platforms: 3
Number of Halting Trains: 2
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: 3.6/5 (16 votes)
cleanliness - good (2)
porters/escalators - average (2)
food - good (2)
transportation - good (2)
lodging - average (2)
railfanning - good (2)
sightseeing - good (2)
safety - excellent (2)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 20 of 46 News Items  next>>
Nov 25 2019 (12:59) திருவாரூர்-காரைக்குடி பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும் அதிகாரி தகவல் (www.dailythanthi.com)
New/Special Trains
SR/Southern
0 Followers
28586 views

News Entry# 395518  Blog Entry# 4496813   
  Past Edits
Nov 25 2019 (12:59)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Nov 25 2019 (12:59)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by Kamban Express~/1069947

Nov 25 2019 (12:59)
Station Tag: Pattukottai/PKT added by Kamban Express~/1069947

Nov 25 2019 (12:59)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947
திருவாரூர்-காரைக்குடி பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும் என தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் கூறினார்.
பதிவு: நவம்பர் 24, 201904:30 AM
பட்டுக்கோட்டை,
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர், பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தன், ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள் ஆகியோர் திருச்சியில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
...
more...


அந்த கோரிக்கை மனுவில், திருவாரூர்-காரைக்குடி இடையே பயண நேரம் 6½ மணி நேரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும். ரெயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை விரைவில் நியமித்து ரெயில் சேவையை முழுமையாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.
கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் கூறியதாவது:-
பயண நேரம் குறைப்பு
திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது திருவாரூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் காரைக்குடிக்கு 12.30 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல காரைக்குடியில் இருந்து 2.30 மணிக்கு புறப்படும் ரெயில் திருவாரூர் சென்று சேர இரவு 9 மணிவரை ஆகிறது.
எனவே ரெயில்வே கேட்டுகளுக்கு ஆட்களை நியமித்து பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும். இந்த வழித்தடத்தில் இரவு நேரத்தில் பணியாற்ற ‘ஸ்டே‌‌ஷன் மாஸ்டர்கள்’ நியமிக்கும் பணி மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும்.
சென்னைக்கு ரெயில்
அதன் பிறகு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவு ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும். அடுத்த மாதம்(டிசம்பர்) 10-ந் தேதிக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Aug 21 2019 (12:57) திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் முற்றுகை (www.dailythanthi.com)
Other News
SR/Southern
0 Followers
40660 views

News Entry# 389142  Blog Entry# 4406570   
  Past Edits
Aug 21 2019 (12:57)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Arantangi/ATQ added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Peravurani/PVI added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Pattukottai/PKT added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Adirampattinam/AMM added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Mutupet/MTT added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947
திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதையில் கேட் கீப்பர்கள் நியமிக்க கோரி, திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவு: ஆகஸ்ட் 21, 201904:30 AM
திருச்சி,
திருவாரூர்-காரைக்குடி இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் திருவாரூர்-காரைக்குடி இடையே ‘டெமு’ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள மொத்தம் 77 ரெயில்வே கேட்களில் 5 கேட்களில் மட்டும் கேட் கீப்பர்கள் உள்ளன. மீதமுள்ள 72 ரெயில்வே கேட்களில் கீப்பர்கள்
...
more...
இல்லை.


‘டெமு’ ரெயிலில் முன் மற்றும் பின் பக்கம் தலா ஒரு ஊழியர் பணியில் இருந்து ரெயில்வே கேட் அருகே ரெயில் வரும்போது அந்த ஊழியர்கள் இறங்கி சென்று கேட்டை மூடுவதும், பின்னர் திறந்து விடுவதுமாக உள்ளனர். இதனால் 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய ரெயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக உள்ளது. எனவே ரெயில்வே கேட் கீப்பர்களை உடனடியாக நியமிக்க கோரி திருவாரூர்-காரைக்குடி ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினரும், பொதுமக்களும் ரெயில்வே நிர்வாகத்தினருக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
முற்றுகை
இந்த நிலையில் கேட் கீப்பர்கள் நியமிக்க கோரி, திருச்சி ஜங்ஷனில் உள்ள கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் நேற்று காலை வேன், கார் மற்றும் பஸ்களில் புறப்பட்டு திருச்சி வந்தனர். கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதை உபயோகிப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்க தலைவர் ராமானுஜம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
முடிவில் ஒருங்கிணைப்பு செயலாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.
உண்ணாவிரத போராட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டு பேசினார். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற ரெயில்வே மத்திய மந்திரி மற்றும் தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தார். கோரிக்கைகள் தொடர்பாக மனுவை திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்தனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து ஜெயராமன் நிருபர்களிடம் கூறுகையில், “திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதையில் கேட் கீப்பர் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினர், உள்ளூர் இளைஞர்களை தக்க பயிற்சி கொடுத்து உடனே நியமிக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு ரெயில்களை இயக்க வேண்டும். மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும். திருவாரூரில் இருந்து தென் மாவட்டம் மற்றும் வட மாநிலங்களுக்கு ரெயில் சேவை தொடங்க வேண்டும். திருவாரூர்-காரைக்குடி அகல பாதையில் கேட் கீப்பர்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்ததாக சென்னையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
Jun 17 2019 (17:57) திருத்துறைப்பூண்டி - அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை திட்டம் நடப்பு ஆண்டு நிறைவேறுமா? (www.dinakaran.com)
Rail Budget
SR/Southern
0 Followers
19532 views

News Entry# 384439  Blog Entry# 4345434   
  Past Edits
Jun 17 2019 (17:57)
Station Tag: Vedaranniyam/VDY added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:57)
Station Tag: Agastiyampalli/AGX added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:57)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:57)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947
மன்னார்குடி, ஜூன் 14: திருத்துறைப்பூண்டி - அகஸ்தியன்பள்ளி இடையே மீட்டர்கேஜ் பாதையில் இயங்கி வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் தற்போது இந்த தடத்தில் புதிதாக போடப்பட்டு வரும் அகல ரயில் பாதை பணிகள் மந்த நிலையில் நடந்து வருவதால் அப்பணிகளை துரிதப்படுத்தி நடப்பு நிதியாண்டுக்குள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - நாகை மாவட்டம் கோடியக்கரை இடையிலான மீட்டர்கேஜ் பாதையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தடத்தில் 1994ம் ஆண்டு வரை அகஸ்தியன்பள்ளியில் இருந்து சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. உப்பு போக்குவரத்து மழைக் காலங்களில் பல மாதங்கள் தொடர்ந்து இல்லாததால் முற்றிலுமாக இந்த பாதையை ரயில்வே நிர்வாகம் மூடி விட்டது.
இந்தப் பாதை மீட்டர்கேஜ் ஆக இருந்த போது வெளிநாட்டு பறவைகள், வன விலங்குகளை குடும்பத்தோடு நேரிடையாக பார்த்து மகிழவும், அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் வேதாரண்யம், கோடியக்கரை கடலில் புனித நீராடவும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து ரயிலில் வந்து செல்வார்கள்.இந்த தடத்தில் கரியாப்பட்டினம், நெய் விலக்கு,
...
more...
தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் இயங்கின.திருத்துறைப்பூண்டியில் இருந்து விரைவு ரயில் ஏறி சென்னை செல்ல அகஸ்தியன்பள்ளி ரயில் நிலையத்தில் அப்போது முன்பதிவும் நடந்தது. அந்த பகுதி மக்களுக்கு என முன்பதிவில் ஒதுக்கீடு இருந்தது. நாள் ஒன்றுக்கு 100 சரக்கு பெட்டிகள் வரை உப்பு ஏற்றப்படும். சுமைப்பணியாளர்கள், கணக்கர்கள், வாகன ஒட்டுனர்கள், சிறுசிறு வியாபாரிகள் என நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக அகஸ்தியன்பள்ளி ரயில் நிலையம் இருந்து வந்தது.
திருவாரூர் - காரைக்குடி ரயில்வே அகலப்பாதை திட்டத்தில் 37 கி.மீ திருத்துறைப்பூண்டி - அகஸ்தியன்பள்ளி பாதை இணைக்கப்பட்டு பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன. திருவாரூர் - காரைக்குடி இடையே அகலப் பாதை பணிகள் நிறைவடைந்து கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ரயில் இயக்கப்படுவதால் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியன்பள்ளி அகலப்பாதை பணிகளின் எப்போது நிறைவடையும் என எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.இது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில்,நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை ரயில் பாதை அமைக்க காட்டு வழியாக செல்ல வேண்டும். இதற்கு வனத்துறையின் அனுமதி தேவை.இந்த தடத்தில் ரயில்களை இயக்க ரயில்பாதை தேவைக்கான வலுவான காரணம் முன் வைக்கப்பட வேண்டும். அப்போது தான் அனுமதி கிடைக்கும். மேலும் வன மற்றும் விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பும் சந்திக்க நேரிடலாம் என ரயில்வே கருதி அகலப்பாதை பணியை அகஸ்தியன்பள்ளியோடு ரயில்வே நிறுத்திக் கொண்டு விட்டது.
இத்திட்டத்தில் இடம்பெற்ற மேல்பாலங்கள், கீழ்ப்பாலங்கள் என அனைத்து 70 பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. தண்டவாளங்கள் பதிக்க 10 லட்சம் கன மீட்டர் மண் நிரப்பி தரை வழித் தடத்தில் சமன்படுத்த வேண்டி இருக்கிறது. நீண்ட இழுபறிக்கு பிறகே இத்திட்டத்திற்கான குவாரி அனுமதியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழங்கியதாக தெற்கு ரயில்வே வாரியத்திடம் தெரிவித்து இருக்கிறது. கஜாபுயல் இத்திட்டத்தை மேலும் தாமதப்படுத்தி விட்டதுஇறுதி கட்ட பணிகளான சிக்னல் அமைக்க ரூ.3 கோடியே 48 லட்சத்திலும், கேபிள் அமைத்து தொலை தொடர்பு ஏற்படுத்த ரூ.2 கோடியே 29 லட்சத்திலும் டென்டர் தற்போது விடப்பட்டு இருக்கிறது.வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் இத்திட்ட பணிகள் முடிந்து விடும் என தெற்கு ரயில்வே வாரியத்திடம் உறுதி அளித்து இருக்கிறது. நடப்பு 2019-20 நிதியாண்டு இறுதிக்குள் இந்த பாதையில் உறுதியாக ரயில்கள் இயக்கப்படும் என கூறினார்.
Jun 17 2019 (17:47) வேதாரண்யம், ஜூன் 13: அகஸ்தியன் பள்ளியில் அகல ரயில் பாதை பணியை துரிதப்படுத்த வேண்டும் என வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில், திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியன்பள்ளிக்கு ரயில் சேவை தொடங்கும் பணி (www.dinakaran.com)
0 Followers
50350 views

News Entry# 384438  Blog Entry# 4345423   
  Past Edits
Jun 17 2019 (17:47)
Station Tag: Arantangi/ATQ added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Peravurani/PVI added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Pattukottai/PKT added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Adirampattinam/AMM added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Mutupet/MTT added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Train Tag: Karaikkudi - Thiruvarur DEMU Special/06848 added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Train Tag: Thiruvarur - Karaikudi DEMU Special/06847 added by Kamban Express~/1069947
மன்னார்குடி, ஜூன் 13: திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் பயண நேரத்தை குறைக்கவும், பாது காப்பை உறுதிபடுத்தவும் தேவையான எண்ணிக்கையில் கேட் கீப்பர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும் என மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயலுக்கு திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன், அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:பத்தாண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள திருவாரூர் -முத்துப்பேட்டை அகல ரயில் பாதையில் தேவையான எண்ணிக்கைகளில் கேட் கீப்பர்களை உடனடியாக பணியமர்த்தி திருவாரூர்- காரைக்குடி இடையிலான பயணநேரத்தை வெகுவாக குறைக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும். திருப்பதி - மன்னார்குடி, மன்னார்குடி - திருப்பதி (17407/408) ரயிலை தினமும் இயக்க வேண்டும்.சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக தினமும் அந்தோதயா ரயில் இயக்க வேண்டும். தினம்தோறும் அதிகாலையில் காரைக்கால் - பெங்களூர் துரித ரயில் திருவாரூர் வந்த பிறகு திருவாரூரில் இருந்து திருச்சிக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும்.நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் அதிக நேரம் மூடப்படுவதை குறைக்கும் வண்ணம் செம்மொழி விரைவு ரயிலுக்கு திருவாரூரில் இன்ஜின் மாற்றம் செய்ய வேண்டும். விழுப்புரத்தில் இருந்து தினம்தோறும் மயிலாடுதுறை வரை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 3 பயணிகள் ரயில்களில் ஒன்றை திருவாரூர் வழியாக காரைக்குடி வரையிலும், மற்றொன்றை திருவாரூர் வழி வேளாங்கண்ணி வரையிலும், மற்றொன்றை திருவாரூர் வரையும் நீட்டிக்க வேண்டும். திருவாரூரில் இருந்து திருச்சிக்கு...
more...
முதல் ரயில் காலை 8-15 மணிக்கும், அடுத்த ரயில் மதியம் 2-30 மணிக்கும் உள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் புதிதாக மேலும் ஒரு ரயில் திருச்சி வரை இயக்கப்பட வேண்டும்.
அதிகாலையில் மன்னார்குடி செல்லும் செல்லும் மன்னை விரைவு ரயிலும், காரைக்கால் செல்லும் கம்பன் விரைவு ரயிலும் மாலை வரை எந்த பயனும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மற்றும் பெட்டிகளைக் கொண்டு விழுப்புரம் மற்றும் திருச்சி வரை விரைவு ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுந்த காரணமின்றி தரம் இறக்கப்பட்டுள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை முன்பு இருந்தது போல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவாரூர் ரயில் நிலையத்தின் முகப்பு அழகுற மாற்றி அமைப்பதுடன் அனைத்து நடைமேடைகளிலும் கழிவறை வசதி, போதுமான இருக்கை வசதிகள், ஏடிஎம் வசதி பாதுகாப்பான இருசக்கர வாகன காப்பகம், செய்ய நடவடிக்கை வேண்டும் ரோட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் எல்லோரும் பார்க்கக் கூடிய விதத்தில் அரைவட்டத்தில் ஆன திருவாரூர் சந்திப்பு என்ற பெயர் பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Jun 17 2019 (17:35) அகஸ்தியன் பள்ளியில் அகல ரயில் பாதை பணி துரிதப்படுத்தப்படுமா? வர்த்தக சங்கம் எதிர்பார்ப்பு (www.dinakaran.com)
Rail Budget
SR/Southern
0 Followers
15097 views

News Entry# 384437  Blog Entry# 4345415   
  Past Edits
Jun 17 2019 (17:35)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:35)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:35)
Station Tag: Vedaranniyam/VDY added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:35)
Station Tag: Agastiyampalli/AGX added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:35)
Station Tag: Agra Cantt./AGC added by Kamban Express~/1069947
வேதாரண்யம், ஜூன் 13: அகஸ்தியன் பள்ளியில் அகல ரயில் பாதை பணியை துரிதப்படுத்த வேண்டும் என வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில், திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியன்பள்ளிக்கு ரயில் சேவை தொடங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அகல ரயில்பாதை பயணிகள் பயன்பாட்டிற்காகவும், சரக்கு போக்குவரத்திற்காகவும் பயன்பட்டு வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்டு வந்த வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளி ரயில்பாதை கடந்த 37 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பணியை துரிதப்படுத்தி ரயில் சேவையை தொடங்கி சரக்கு போக்குவரத்துக்காகவும் பயணிகள் பயன்பாட்டிற்காகவும் இந்த அகலரயில் பாதையை சீரமைத்து தரவேண்டும் என வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Page#    Showing 1 to 20 of 46 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy