Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

For RailFans, the Journey itself is the Destination. - Sreerup Patranabis

Full Site Search
  Full Site Search  
FmT LIVE - Follow my Trip with me... LIVE
 
Wed Sep 29 05:24:58 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Post PNRAdvanced Search
Large Station Board;
Entry# 614176-0
Large Station Board;
Entry# 4333962-1

ATQ/Arantangi (3 PFs)
அறந்தாங்கி     अरंतांगी

Track: Single Diesel-Line

Show ALL Trains
Aranthangi - Kattumavadi Rd, Aranthangi
State: Tamil Nadu


Zone: SR/Southern   Division: Tiruchchirappalli

No Recent News for ATQ/Arantangi
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 3
Number of Halting Trains: 4
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: 3.8/5 (16 votes)
cleanliness - good (2)
porters/escalators - good (2)
food - good (2)
transportation - good (2)
lodging - good (2)
railfanning - good (2)
sightseeing - good (2)
safety - good (2)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 8 of 8 News Items  
Aug 21 2019 (12:57) திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் முற்றுகை (www.dailythanthi.com)
Other News
SR/Southern
0 Followers
51503 views

News Entry# 389142  Blog Entry# 4406570   
  Past Edits
Aug 21 2019 (12:57)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Arantangi/ATQ added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Peravurani/PVI added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Pattukottai/PKT added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Adirampattinam/AMM added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Mutupet/MTT added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Aug 21 2019 (12:57)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947
திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதையில் கேட் கீப்பர்கள் நியமிக்க கோரி, திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவு: ஆகஸ்ட் 21, 201904:30 AM
திருச்சி,
திருவாரூர்-காரைக்குடி இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் திருவாரூர்-காரைக்குடி இடையே ‘டெமு’ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள மொத்தம் 77 ரெயில்வே கேட்களில் 5 கேட்களில் மட்டும் கேட் கீப்பர்கள் உள்ளன. மீதமுள்ள 72 ரெயில்வே கேட்களில் கீப்பர்கள்
...
more...
இல்லை.


‘டெமு’ ரெயிலில் முன் மற்றும் பின் பக்கம் தலா ஒரு ஊழியர் பணியில் இருந்து ரெயில்வே கேட் அருகே ரெயில் வரும்போது அந்த ஊழியர்கள் இறங்கி சென்று கேட்டை மூடுவதும், பின்னர் திறந்து விடுவதுமாக உள்ளனர். இதனால் 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய ரெயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக உள்ளது. எனவே ரெயில்வே கேட் கீப்பர்களை உடனடியாக நியமிக்க கோரி திருவாரூர்-காரைக்குடி ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினரும், பொதுமக்களும் ரெயில்வே நிர்வாகத்தினருக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
முற்றுகை
இந்த நிலையில் கேட் கீப்பர்கள் நியமிக்க கோரி, திருச்சி ஜங்ஷனில் உள்ள கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் நேற்று காலை வேன், கார் மற்றும் பஸ்களில் புறப்பட்டு திருச்சி வந்தனர். கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதை உபயோகிப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்க தலைவர் ராமானுஜம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
முடிவில் ஒருங்கிணைப்பு செயலாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.
உண்ணாவிரத போராட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டு பேசினார். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற ரெயில்வே மத்திய மந்திரி மற்றும் தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தார். கோரிக்கைகள் தொடர்பாக மனுவை திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்தனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து ஜெயராமன் நிருபர்களிடம் கூறுகையில், “திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதையில் கேட் கீப்பர் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினர், உள்ளூர் இளைஞர்களை தக்க பயிற்சி கொடுத்து உடனே நியமிக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு ரெயில்களை இயக்க வேண்டும். மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும். திருவாரூரில் இருந்து தென் மாவட்டம் மற்றும் வட மாநிலங்களுக்கு ரெயில் சேவை தொடங்க வேண்டும். திருவாரூர்-காரைக்குடி அகல பாதையில் கேட் கீப்பர்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்ததாக சென்னையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
Jun 17 2019 (17:47) வேதாரண்யம், ஜூன் 13: அகஸ்தியன் பள்ளியில் அகல ரயில் பாதை பணியை துரிதப்படுத்த வேண்டும் என வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில், திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியன்பள்ளிக்கு ரயில் சேவை தொடங்கும் பணி (www.dinakaran.com)
0 Followers
64154 views

News Entry# 384438  Blog Entry# 4345423   
  Past Edits
Jun 17 2019 (17:47)
Station Tag: Arantangi/ATQ added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Peravurani/PVI added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Pattukottai/PKT added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Adirampattinam/AMM added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Mutupet/MTT added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Train Tag: Karaikkudi - Thiruvarur DEMU Special/06848 added by Kamban Express~/1069947

Jun 17 2019 (17:47)
Train Tag: Thiruvarur - Karaikudi DEMU Special/06847 added by Kamban Express~/1069947
மன்னார்குடி, ஜூன் 13: திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் பயண நேரத்தை குறைக்கவும், பாது காப்பை உறுதிபடுத்தவும் தேவையான எண்ணிக்கையில் கேட் கீப்பர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும் என மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயலுக்கு திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன், அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:பத்தாண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள திருவாரூர் -முத்துப்பேட்டை அகல ரயில் பாதையில் தேவையான எண்ணிக்கைகளில் கேட் கீப்பர்களை உடனடியாக பணியமர்த்தி திருவாரூர்- காரைக்குடி இடையிலான பயணநேரத்தை வெகுவாக குறைக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும். திருப்பதி - மன்னார்குடி, மன்னார்குடி - திருப்பதி (17407/408) ரயிலை தினமும் இயக்க வேண்டும்.சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக தினமும் அந்தோதயா ரயில் இயக்க வேண்டும். தினம்தோறும் அதிகாலையில் காரைக்கால் - பெங்களூர் துரித ரயில் திருவாரூர் வந்த பிறகு திருவாரூரில் இருந்து திருச்சிக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும்.நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் அதிக நேரம் மூடப்படுவதை குறைக்கும் வண்ணம் செம்மொழி விரைவு ரயிலுக்கு திருவாரூரில் இன்ஜின் மாற்றம் செய்ய வேண்டும். விழுப்புரத்தில் இருந்து தினம்தோறும் மயிலாடுதுறை வரை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 3 பயணிகள் ரயில்களில் ஒன்றை திருவாரூர் வழியாக காரைக்குடி வரையிலும், மற்றொன்றை திருவாரூர் வழி வேளாங்கண்ணி வரையிலும், மற்றொன்றை திருவாரூர் வரையும் நீட்டிக்க வேண்டும். திருவாரூரில் இருந்து திருச்சிக்கு...
more...
முதல் ரயில் காலை 8-15 மணிக்கும், அடுத்த ரயில் மதியம் 2-30 மணிக்கும் உள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் புதிதாக மேலும் ஒரு ரயில் திருச்சி வரை இயக்கப்பட வேண்டும்.
அதிகாலையில் மன்னார்குடி செல்லும் செல்லும் மன்னை விரைவு ரயிலும், காரைக்கால் செல்லும் கம்பன் விரைவு ரயிலும் மாலை வரை எந்த பயனும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மற்றும் பெட்டிகளைக் கொண்டு விழுப்புரம் மற்றும் திருச்சி வரை விரைவு ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுந்த காரணமின்றி தரம் இறக்கப்பட்டுள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை முன்பு இருந்தது போல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவாரூர் ரயில் நிலையத்தின் முகப்பு அழகுற மாற்றி அமைப்பதுடன் அனைத்து நடைமேடைகளிலும் கழிவறை வசதி, போதுமான இருக்கை வசதிகள், ஏடிஎம் வசதி பாதுகாப்பான இருசக்கர வாகன காப்பகம், செய்ய நடவடிக்கை வேண்டும் ரோட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் எல்லோரும் பார்க்கக் கூடிய விதத்தில் அரைவட்டத்தில் ஆன திருவாரூர் சந்திப்பு என்ற பெயர் பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Jun 04 2019 (19:14) திருவாரூர்-காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது (www.dailythanthi.com)
New/Special Trains
SR/Southern
0 Followers
43648 views

News Entry# 383441  Blog Entry# 4334915   
  Past Edits
Jun 04 2019 (19:14)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Station Tag: Arantangi/ATQ added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Station Tag: Peravurani/PVI added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Station Tag: Pattukottai/PKT added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Station Tag: Adirampattinam/AMM added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Station Tag: Mutupet/MTT added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Station Tag: Tirunelikkaval/TNK added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Train Tag: Thiruvarur - Karaikudi DEMU Special/06847 added by Kamban Express~/1069947

Jun 04 2019 (19:14)
Train Tag: Karaikkudi - Thiruvarur DEMU Special/06848 added by Kamban Express~/1069947
திருவாரூர்-காரைக்குடி இடையே 7 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
பதிவு: ஜூன் 02, 201904:30 AM
திருவாரூர்,
திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதை மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்து வந்தது. தமிழகத்திலேயே கடைசி மீட்டர்கேஜ் பாதை என்ற நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
...
more...


நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களால் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரெயில் பாதுகாப்பு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ரெயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து எந்தவித அறிவிப்பு இல்லாமல் இருந்தது. இதனையடுத்து ரெயில் உபயோகிப்பாளர் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு மையம், வர்த்தக சங்கம் என பல்வேறு தரப்பினர் ரெயில்வே நிர்வாகத்திற்கு ரெயில் சேவையை உடனடியாக தொடங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில் திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து ஜூன் 1-ந் தேதி தொடங்கப்படும். 3 மாதங்களுக்கு டெமு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையத்தில் டெமு ரெயில் காலை 8.15 மணிக்கு கொடி அசைக்கப்பட்டு காரைக்குடிக்கு புறப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் சேவை தொங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த ரெயிலில் பயணம் செய்தனர்.
தொடக்க நிகழ்ச்சியில் ரெயில் நிலைய மேலாளர் விவேகானந்தன், நாகை எம்.பி. செல்வராசு, ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கர், நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் ரமேஷ், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கர் கூறுகையில், திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பாதையில் 72 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான கேட்கீப்பர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் ரெயிலை ஒவ்வொரு கேட்டிலும் நிறுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக கேட்கீப்பர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றார்.
நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் ரமேஷ் கூறுகையில், டெமு ரெயிலில் கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்வதற்கு 6 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் பயணிகள் நலன் கருதி அவசியம் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். கேட்கீப்பர் காலி பணியிடங்களை நிரப்பி கால விரயத்தை தவிர்க்க வேண்டும். இந்த பாதையில் முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்றார்.
Sep 01 2018 (00:38) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதையில் திருநெல்லிக்காவல் வரை சோதனை ரயில் ஓட்டம் நவம்பரில் சேவை துவங்க நடவடிக்கை (www.dinakaran.com)
New Facilities/Technology
SR/Southern
0 Followers
11567 views

News Entry# 354482  Blog Entry# 3767660   
  Past Edits
Sep 01 2018 (00:38)
Station Tag: Arantangi/ATQ added by Kamban Express~/1069947

Sep 01 2018 (00:38)
Station Tag: Peravurani/PVI added by Kamban Express~/1069947

Sep 01 2018 (00:38)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by Kamban Express~/1069947

Sep 01 2018 (00:38)
Station Tag: Pattukottai/PKT added by Kamban Express~/1069947

Sep 01 2018 (00:38)
Station Tag: Mutupet/MTT added by Kamban Express~/1069947

Sep 01 2018 (00:38)
Station Tag: Tirunelikkaval/TNK added by Kamban Express~/1069947

Sep 01 2018 (00:38)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Sep 01 2018 (00:38)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947
திருவாரூர், ஆக.31: திருவாரூர் - திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை திட்டத்தில் திருநெல்லிக்காவல் வரையிலான சோதனை ரயில் ஓட்டம் நேற்று நடைபெற்றது.
காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரையிலான 122 கி.மீ தூர மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. அதன்படி இந்த அகல ரயில் பாதை திட்டமானது மிகவும் தாமதமாக நடைபெற்று வந்த நிலையில் ஒரு வழியாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான 72 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு கடந்தாண்டு மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் வரையிலான இந்த திட்டமானது கிடப்பில் போடப்பட்ட நிலையில் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கென ரூ.240 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு
...
more...
தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் குல்ஸ்ரஷ்தாவிற்கு  ரயில்வே வாரிய தலைவர் அஸ்வினிலோகானி உத்தரவிட்டார். இதன்பேரில் இதற்கான பணிகள் கடந்த 5 மாத காலமாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. அதன்படி பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் வரை ஒரு பிரிவாகவும், தில்லைவளாகத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ஒரு பிரிவாகவும், திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரையில் மற்றொரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை 26 கி.மீ தூரத்தில் திருநெல்லிக்காவல் வரையில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதற்கான சோதனை ரயில் இன்ஜின் ஓட்டம் நேற்று  திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கப்பட்டது. இதையடுத்து அந்த ரயிலில் இன்ஜினுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் 12  மணியளவில் சோதனை ஓட்டம் துவங்கியது. இதில் தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட தலைமை துணை பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் செயற்பொறியாளர் வினோத்குமார், பொறியாளர் குமார் மற்றும் திருவாரூர் ரயில் நிலைய அதிகாரி ராஜன் ஆகியோர் தலைமையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தலைமை  துணை பொறியாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான 26 கிலோமீட்டர் தூரமானது ரூ.120 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் ரயில் சேவை தூங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Aug 22 2018 (22:54) போதிய கூட்டம் இல்லாததால் காரைக்குடி– பட்டுக்கோட்டை பயணிகள் ரெயில் தற்காலிக நிறுத்தம் (www.dailythanthi.com)
Rail Budget
SR/Southern
0 Followers
10922 views

News Entry# 352515  Blog Entry# 3739138   
  Past Edits
Aug 22 2018 (22:54)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Aug 22 2018 (22:54)
Station Tag: Tirunelikkaval/TNK added by Kamban Express~/1069947

Aug 22 2018 (22:54)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by Kamban Express~/1069947

Aug 22 2018 (22:54)
Station Tag: Mutupet/MTT added by Kamban Express~/1069947

Aug 22 2018 (22:54)
Station Tag: Peravurani/PVI added by Kamban Express~/1069947

Aug 22 2018 (22:54)
Station Tag: Arantangi/ATQ added by Kamban Express~/1069947

Aug 22 2018 (22:54)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by Kamban Express~/1069947

Aug 22 2018 (22:54)
Station Tag: Pattukottai/PKT added by Kamban Express~/1069947
காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே சென்று வந்த பயணிகள் ரெயிலில் போதிய கூட்டம் இல்லாததால் ஒரு மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 20,  2018 03:30 AM
மாற்றம்: ஆகஸ்ட் 20,  2018 03:36 AM
காரைக்குடி
காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே சுமார் 73கிலோ மீட்டர்
...
more...
தூரத்தில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 30ந்தேதி முதல் அதில் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வழித்தடத்தில் ரெயில்வே கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியிடமாக இருந்ததால் அந்த ரெயில் ஒரு நாள் இயக்கத்திற்கு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த ரெயிலை தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கையை அடுத்த இந்த ரெயில் கடந்த ஜூலை மாதம் 2ந்தேதி முதல் இயக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ரெயில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2தினங்கள் மட்டும் இயக்கப்பட்டது. காரைக்குடி–பட்டுக்கோட்டை ரெயில்வே வழித்தடத்தில் 35ரெயில்வே கேட் இருந்த போதிலும், அதில் 5இடங்களில் மட்டும் தான் கேட் கீப்பர் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்கள் அருகே ரெயில் செல்லும் போது அந்த ரெயில் கேட்டிற்கு முன்பே ரெயிலை நிறுத்தி விட்டு அந்த ரெயிலில் பின் பெட்டில் வரும் கேங்மேன்கள் இறங்கி வந்து அந்த கேட்டை மூடிய பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் இந்த ரெயிலின் பயணம் நேரம் 6மணி நேரத்திற்கும் மேல் அதிகரித்தது.
பொதுவாக பஸ்சில் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றால் 3மணி நேரத்திற்கு முன்பு சென்று விடலாம். ஆனால் இந்த பயணிகள் ரெயிலில் 6மணி நேரத்திற்கும் மேல் ஆவதால் பெரும்பாலான பயணிகள் இந்த ரெயிலை தவிர்த்து வந்தனர். இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்து வந்தது. இதையடுத்து இந்த ரெயில் மூலம் ரெயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ரெயிலை ஒரு மாதம் காலமாக வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி நிறுத்தி வைத்துள்ளதாக தென்னக ரெயில்வே துறையினர் அறிவித்தனர். மேலும் இந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கையை இதுநாள் வரை ரெயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர காரைக்குடியில் இருந்து நேரடியாக மதுரைக்கு புதிய ரெயில்வே பாதை அமைக்க வேண்டும் பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எந்தவித அரசியல் முக்கிய பிரமுகர்களோ, தென்னக ரெயில்வே அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை என்பது மற்றொரு தகவலாகும்.
Page#    Showing 1 to 8 of 8 News Items  

Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy