ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எவ்வளவு ஒதுக்கீடு? கிடப்பில் பல திட்டங்கள்
ரயில்வே பட்ஜெட்டில், தமிழக திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில், செங்கோட்டை - புனலூர்; பொள்ளாச்சி - பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி - போத்தனூர் ஆகிய அகல ரயில் பாதை திட்டங்களுக்கும், தஞ்சை - பொன்மலை இரட்டை ரயில் பாதை; திருவள்ளூர் - அரக்கோணம், நான்காவது வழித்தடம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
குறைவான நிதியே:
ஈரோடு...
more... - பழநி; ஸ்ரீபெரும் புதூர் - கூடுவாஞ்சேரி, சென்னை - கடலூர் ஆகிய புதிய ரயில் பாதை; மதுரை - போடி நாயக்கனூர் அகல ரயில் பாதை; ஓமலூர் - மேட்டூர் அணை இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரயில்வே மூலம் செயல்படுத்தும் புதிய ரயில் பாதை, இரட்டை ரயில் பாதை, அகல ரயில் பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, 2,434 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரயில்வேயில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி., கன்டெய்னர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட, 11 பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து திரட்டப்படும் நிதியைக் கொண்டு, மதுரை - குமரி, குமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
யூனியன் தலைவர்:
இதுகுறித்து, தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதைக்கு போதிய ஒதுக்கீடு, மதுரை - குமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தை கொண்டு வந்தது சிறப்பு. ஏற்கனவே, தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட, 24 திட்டங்களில், குமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை திட்டம் மட்டுமே வந்துள்ளது.
* திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை புதிய ரயில் பாதைக்கு, 145 கோடி ரூபாய் தேவை. ஆனால், 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
* திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதைக்கு, 371 கோடி ரூபாய் தேவைக்கு, 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
* புதிய ரயில் பாதை திட்டமான, ஈரோடு - பழநிக்கு, 1,000 ரூபாய்; சென்னை கடற்கரை - கடலூர், 1 கோடி ரூபாய்; ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரிக்கு, 1,000 ரூபாய் மற்றும் அகல ரயில் பாதை திட்டமான, மதுரை - போடி நாயக்கனூருக்கு, 10 லட்சம் ரூபாய் என, குறைந்தளவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய ரயில் பாதை
திட்டம் ஒதுக்கீடு (ரூபாயில்)
ஈரோடு - பழநி (91.05 கி.மீ.,) 1,000 ரூபாய்
திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை (70 கி.மீ.,) 5 கோடி
சென்னை - கடலூர் (179.28 கி.மீ.,) 1 கோடி
ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி (60 கி.மீ.,) 1,000 ரூபாய்
திண்டிவனம் - நகரி (179.2 கி.மீ.,) 5 கோடி
அத்திப்பட்டு - புத்தூர் ( 88.3 கி.மீ.,) 50.10 கோடி
அகல ரயில் பாதை
திட்டம் ஒதுக்கீடு (ரூபாயில்)
மதுரை - போடி நாயக்கனூர் (90.41 கி.மீ.,) 10 லட்சம்
பொள்ளாச்சி - பாலக்காடு,
பொள்ளாச்சி - போத்தனூர் 100 கோடி
செங்கோட்டை - புனலூர் (49.38 கி.மீ.,) 85.69 கோடி
மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி மற்றும்
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி திட்டத்துடன்,
நீடாமங்கலம் - மன்னார்குடி - பட்டுக்கோட்டை மற்றும்
தஞ்சை - பட்டுக்கோட்டை பாதை இணைந்த திட்டம் 130 கோடி
இரட்டை ரயில் பாதை
திட்டம் ஒதுக்கீடு (ரூபாயில்)
திருவள்ளூர் - அரக்கோணம் 4வது வழித்தடம் ( 25.83 கி.மீ.,) 205 கோடி
ஓமலூர் - மேட்டூர் அணை (29.03 கி.மீ.,) 10 கோடி
தஞ்சை - பொன்மலை (46.96 கி.மீ.,) 147.3 கோடி
சென்னை சென்ட்ரல் - பேசின்பாலம் 5 மற்றும் 6வது வழித்தடம் 4 கோடி
திருவனந்தபுரம் - குமரி 20.58 கோடி
மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி 18.29 கோடி
மணியாச்சி - நாகர்கோவில் 38.87 கோடி
- நமது நிருபர் -